

திருநெல்வேலி மாநகரம் மேலப்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குறிச்சி பைபாஸ் சாலை அருகே போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் முகமது இஸ்மாயில் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அப்பகுதியில் சட்டவிரோத மதுபான விற்பனையில் ஈடுபட்ட மேலப்பாளையம் குறிச்சியை சேர்ந்த சொரிமுத்து மகன் தவசி (வயது 40) என்பவரிடமிருந்து 35 மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார், அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
இதேபோல் பெருமாள்புரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ரெட்டியார்பட்டி இடுகாடு பகுதியில் போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் அப்துல் ஹமீது மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அப்பகுதியில் சட்டவிரோத மதுபான விற்பனையில் ஈடுபட்ட தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த ரவி மகன் விஜய்(27) என்பவரிடமிருந்து 27 மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார், அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.