ஜாமீனில் வெளியே வந்தவர் கொலையில் 7 பேர் கைது

சிவகிரி அருகே ஜாமீனில் வெளியே வந்தவர் கொலையில் 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஜாமீனில் வெளியே வந்தவர் கொலையில் 7 பேர் கைது
Published on

சிவகிரி:

சிவகிரி அருகே தேவிப்பட்டணம் பகுதியைச் சேர்ந்தவர் கருப்பையா மகன் செல்வகுமார் (வயது 40). இவரை ஒரு கொலை தொடர்பாக போலீசார் கைது செய்து, பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர். கடந்த 11-ந் தேதி செல்வகுமார் ஜாமீனில் வெளியே வந்தார். 13-ந் தேதி செல்வகுமார் வழக்கு விசாரணைக்கு ஆஜராவதற்காக சிவகிரி கோர்ட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்றபோது மர்மகும்பல் வழிமறித்து சரமாரியாக அரிவாளால் வெட்டியது. இதில் செல்வகுமார் சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்து சிவகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்தநிலையில் இந்த கொலை வழக்கு தொடர்பாக தேவிபட்டணம் மற்றும் சிவகிரி சுற்றுவட்டார பகுதிகளில் பதுங்கி இருந்ததாக தேவிப்பட்டணம் காமராஜர் காலனியைச் சேர்ந்த முருகன் மகன் செல்வகுமார் (19), புது மாடசாமி மகன் மதன்குமார் (22), அயோத்தி மகன் காளிராஜ் (19), வின்சென்ட் மகன் மாதவன் (19), மாரிராஜ் மகன் முனீஸ்வரன் (27), பிச்சையா மகன் சிவசுப்பிரமணியன் (20) மற்றும் 17 வயது மதிக்கத்தக்க சிறுவன் உள்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர்.

விசாரணையில், சிவகுமார் என்பவர் கொலைக்கு பழிக்குப்பழியாக இந்த கொலை நடந்தது தெரியவந்தது. பின்னர் அனைவரையும் சிவகிரி கோர்ட்டில் ஆஜர்படுத்தி பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர். அவர்களில் 17 வயது சிறுவன் நாங்குநேரி சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com