

சென்னை,
தமிழ்நாட்டில் பயிற்சி முடித்த ஐ.பி.எஸ். அதிகாரிகள் 8 பேர் உதவி போலீஸ் சூப்பிரண்டுகளாக பணி நியமனம் பெற்றுள்ளனர். இதற்கான உத்தரவை அரசு பிறப்பித்துள்ளது. அதன் விவரம் வருமாறு:-
கம்பம் சாமுவேல் பிரவீன் கவுதம் கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் உதவி போலீஸ் சூப்பிரண்டாகவும், கேல்கர் சுப்ரமண்யா பால்சந்திரா தூத்துக்குடி உதவி போலீஸ் சூப்பிரண்டாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பிரசன்னகுமார் நாங்குநேரிக்கும், ஷானாஸ் ஒரத்தநாட்டுக்கும், சிபின் திண்டுக்கல்லுக்கும், சிவராமன் ராமநாதபுரத்துக்கும் உதவி போலீஸ் சூப்பிரண்டாக பணி நியமனம் பெற்றுள்ளனர். ஸ்ரீபெரும்புதூருக்கு உதயகுமாருக்கும், நாகர்கோவிலுக்கு யாங்சென் டோமா பூட்டியாவுக்கும் பணி ஒதுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அரசு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.