சாலையோரம் சுற்றி திரிந்த ஒட்டகம் - வனத்துறையினர் மீட்டனர்

செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் ஜி.எஸ்.டி. சாலையோரம் சுற்றி திரிந்த ஒட்டகத்தை வனத்துறையினர் மீட்டனர்.
சாலையோரம் சுற்றி திரிந்த ஒட்டகம் - வனத்துறையினர் மீட்டனர்
Published on

செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் ஜி.எஸ்.டி. சாலையோரம் காலி இடத்தில் மிகவும் உடல் மெலிந்த நிலையில் ஒரு ஒட்டகம் சுற்றிக்கொண்டிருந்தது. இதை பார்த்த பொதுமக்கள், கூடுவாஞ்சேரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார், வண்டலூர் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

அங்கு வந்த வனத்துறையினர் மிகவும் மெலிந்த நிலையில் இருந்த ஒட்டகத்தை மீட்டனர். அந்த ஒட்டகம் எப்படி திடீரென இங்கு வந்தது?. யாராவது ஒட்டகத்தை இரவு நேரத்தில் வாகனத்தில் கடத்தி வரும்போது போலீசாருக்கு பயந்து ஒட்டகத்தை இறக்கி விட்டு சென்றார்களா? என்பது உள்பட பல்வேறு கோணங்களில் வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com