மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியை அமைக்க வேண்டும்

கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்கான மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியை அமைக்க வேண்டும் சட்டசபையில் வசந்தம் கார்த்திகேயன் கோரிக்கை
மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியை அமைக்க வேண்டும்
Published on

கள்ளக்குறிச்சி 

தமிழக சட்டசபையில் ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் வசந்தம் கார்த்திகேயன் பேசியதாவது:- விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்ட கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்கு என கள்ளக்குறிச்சி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இல்லாத ஒரு நிலை உள்ளது. 86 கூட்டுறவு சங்கங்களும், 2 கூட்டுறவு சர்க்கரை ஆலைகளும் உள்ள நிலையில் அலுவல் ரீதியாக அனைத்துக்கும் 100 கிலோமீட்டர் பயணம் செய்து விழுப்புரத்துக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்கான மத்திய கூட்டுறவு வங்கியை அமைத்து தர வேண்டும்.

மணலூர்பேட்டையில் உள்ள தொடக்க கூட்டுறவு கடன் சங்கம் மூலம் வழங்கப்பட்டுள்ள ரூ.8 கோடி விவசாய கடனில் ரூ.5 கோடி கொங்கணாமூர் மற்றும் முருக்கம்பாடி ஊராட்சிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. மேற்படி 2 கிராமங்களில் சுமார் 5 ஆயிரம் மக்கள் வசித்து வருகின்ற நிலையில் சுமார் 530 ஹெக்டர் பரப்பளவில் 100 சதவீதம் விவசாயம் இங்கு நடைபெறுகிறது.

எனவே மணலூர்பேட்டை அருகே உள்ள முருக்கம்பாடி கிராமத்தில் புதியதாக தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் அமைக்க வேண்டும். இதன் மூலம் விவசாய கடன், உரங்கள் பெறுவது என பல்வேறு வகைகளில் விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

இ்வ்வாறு அவர் கூறினார். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com