காலையில் செய்யப்பட்ட சஸ்பெண்ட் மாலையில் ரத்தானது சரித்திர முடிவு - ரூபி மனோகரன்

இடைக்கால நீக்கத்தை உடனடியாக முடிவுக்கு கொண்டுவந்த சோனியா காந்திக்கு நன்றி என ரூபி மனோகரன் தெரிவித்துள்ளார்.
காலையில் செய்யப்பட்ட சஸ்பெண்ட் மாலையில் ரத்தானது சரித்திர முடிவு - ரூபி மனோகரன்
Published on

சென்னை,

காங்கிரஸ் கட்சியில் இருந்து ரூபி மனோகரன் எம்.எல்.ஏ தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்படுவதாக நேற்று காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கை குழு அறிவித்தது.

ரூபி மனோகரனின் இடைநீக்கம் செய்யப்பட்ட விவகாரத்தில், விதிகள் முறையாக பின்பற்றப்படவில்லை.

எனவே, ரூபி மனேகரனுக்கு எதிரான அனைத்து ஒழுங்கு நடவடிக்கைகளையும் நிறுத்தி வைப்பதாக அகில இந்திய காங்கிரஸ் தலைமை தெரிவித்தது.

இந்த நிலையில், காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ ரூபி மனோகரன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், காங்கிரஸ் கட்சி பலமாக திசையை நோக்கி செல்கிறது. மாநில அளவில் நடக்கும் நிகழ்வு அகில இந்திய தலைமைக்கு செல்லவில்லை என்ற பொய்யான தகவல் துடைத்தெறியப்பட்டு உள்ளது.

இடைக்கால நீக்கத்தில் உடனடியாக தலையிட்டு முடிவுக்கு கொண்டுவந்த சோனியா காந்திக்கு எனது நன்றி தெரிவித்து கொள்கிறேன். காலையில் செய்யப்பட்ட சஸ்பெண்ட் மாலையில் ரத்தானது சரித்திர முடிவாகும்.

காங்கிரஸ் கட்சியை எனது தெய்வமாகவும் குடும்பமாகவும் பார்கிறேன். எனது உடலில் காங்கிரஸ் ரத்தம் ஓடுகிறது. இறுதி மூச்சு உள்ளவரை காங்கிரசில் மட்டுமே அரசியல் பணியாற்றுவேன்.

ராகுல் காந்தியின் நடைபயணம் மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. கட்சியில் உள்ள அனைவரையும் ஒருங்கிணைக்கும் பண்புடைய தலைவர் தலைமை பொறுப்பில் உள்ளார். காலையில் செய்யப்பட்ட சஸ்பெண்ட் மாலையில் ரத்தானது சரித்திர முடிவு இதனை காங்கிரஸ் செய்திருக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com