வந்தவழி கருப்பசாமி கோவிலில் ஆடி அன்னதான பெருவிழா

வந்தவழி கருப்பசாமி கோவிலில் ஆடி அன்னதான பெருவிழா நடந்தது.
வந்தவழி கருப்பசாமி கோவிலில் ஆடி அன்னதான பெருவிழா
Published on

தரகம்பட்டி அருகே சிங்கம்பட்டியில் பிரசித்தி பெற்ற வந்தவழி கருப்பசாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் 7 ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே 3 நாட்கள் திருவிழா நடைபெறும். ஆனால் ஆண்டுதோறும் ஆடிப்பெருக்கு முடிந்து முதல் வியாழக்கிழமை அன்று ஆடி அன்னதான பெருவிழா நடைபெறும். அதேபோல் இந்தாண்டும் ஆடி அன்னதான பெருவிழா நடத்த பரம்பரை நிர்வாக அறங்காவலர் வெள்ளைச்சாமி மற்றும் கிராமமக்கள் முடிவு செய்தனர். இதையடுத்து நேற்று தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து குவிந்தனர். பின்னர் 500 கிடாய்களை பக்தர்கள் வெட்டி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். பின்னர் கிடாய்கள் அங்கேயே சமைக்கப்பட்டு வந்தவழி கருப்பசாமிக்கு படைக்கப்பட்டது. பின்னர் அனைத்து பக்தர்களும் ஒன்றாக அமர்ந்து கிடாய் கறிகளை சாப்பிட்டனர். முன்னதாக வந்தவழி கருப்பசாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com