சென்னை வானகரத்தில் வரும் 15ம் தேதி அமமுக பொதுக்குழு கூட்டம் - டிடிவி தினகரன் அறிவிப்பு

சென்னை வானகரத்தில் வரும் 15ம் தேதி அமமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை, 

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுக்குழு சென்னை வானகரத்தில் வருகிற 15-ம் தேதி நடைபெறும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் மக்கள் நலக்கொள்கைகளை தொடர்ந்து நிலைநாட்டிட போராடி வரும் நமது அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் அமமுக கட்சியின் துணைத்தலைவருமான அன்பழகன் தலைமையில், வருகிற 15-ம் தேதி காலை 9 மணிக்கு சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி பேலஸ் மண்டபத்தில் நடைபெற உள்ளது. அனைத்து செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் தங்களுக்கான அழைப்பிதழோடு தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுக கூட்டம் நடைபெற்ற அதே மண்டபத்தில் அமமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com