சென்னையில் விதிமீறி கட்டப்பட்ட கட்டடங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் - மாநகராட்சி தரப்பில் உத்தரவாதம்

சென்னையில் விதிமீறி கட்டப்பட்ட கட்டடங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி தரப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

சென்னையில் விதிமீறி கட்டப்பட்ட கட்டடங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் விதிமீறிய கட்டடங்களின் உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும் சென்னை மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக மாநகராட்சியின் ஐந்தாவது மண்டலத்தில் உள்ள 5,574 சட்ட விரோத கட்டுமனைகளுக்கு எதிராக ருக்மாங்கதன் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இதனைத்தொடர்ந்து சட்டவிரோத கட்டுமானங்களுக்கு எதிரான வழக்கு பிப்.5ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com