ஈரோடு இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெறும்

ஈரோடு இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெறும்
ஈரோடு இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெறும்
Published on

திருவாரூரில் அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆர். 106-வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு நகர செயலாளர் ஆர்.டி.மூர்த்தி தலைமை தாங்கினார். கூட்டத்தில் கட்சியின் அமைப்பு செயலாளரும், மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.காமராஜ் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசுகையில், எல்லா ஆட்சி காலத்திலும் நிதி நெருக்கடிகள் இருக்கத்தான் செய்யும். அவைகளை தாண்டித்தான் எம்.ஜி.ஆர். சத்துணவு திட்டத்தையும், ஜெயலலிதா விலையில்லா அரிசியையும் வழங்கினார். எடப்பாடி பழனிசாமி பொங்கல் பரிசாக ரூ.2500 வழங்கினார். எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றாத தி.மு.க. அரசு ஜெயலலிதாவால் கொண்டுவரப்பட்ட திட்டங்களை எல்லாம் முடக்குகிறது. இதனால் மக்கள் ஆட்சி மாற்றத்திற்கு தயாராகி விட்டார்கள். எப்போது தேர்தல் நடந்தாலும் அ.தி.மு.க. வுக்கு வாக்களிக்க வேண்டும் என்ற உறுதிப்பாடு மக்களிடம் ஏற்பட்டுள்ளது. ஈரோட்டில் நடக்க உள்ள இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெறும் என்றார். இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் தலைமை பேச்சாளர் ஜகன்நாதன், மாவட்ட பொருளாளர் பன்னீர்செல்வம், மாவட்ட நிர்வாகிகள் பாலாஜி, ரயில் பாஸ்கர், கலியபெருமாள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக ஒன்றியச்செயலாளர் மணிகண்டன் வரவேற்றார். முடிவில் ஒன்றிய செயலாளர் செந்தில்வேல் நன்றி கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com