வேட்டவலத்தில் அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்

வேட்டவலம் பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து அ.தி.மு.க. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது.
வேட்டவலத்தில் அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்
Published on

திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் பேரூராட்சியில் 100 சதவீத வீட்டுவரி, தொழில் வரி உயர்வு மற்றும் கழிவுநீர் கால்வாய்களை சரிசெய்ய வேண்டியும், சாலைகளை சரிசெய்ய கோரியும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நகர அ.தி.மு.க. சார்பில் பேரூராட்சி அலுவலகம் எதிரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. நகர செயலாளர் செல்வமணி தலைமை தாங்கினார். நகர அவைத்தலைவர் அப்துல்காதர், நகர துணைச் செயலாளர் பவுன்குமார், ஜெயலலிதா பேரவை செயலாளர் இளங்கோவன், பேரூராட்சி மன்ற முன்னாள் துணைத்தலைவர் தட்சணாமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கீழ்பென்னாத்தூர் ஒன்றிய செயலாளர் பாஷ்யம் வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக திருவண்ணாமலை மாவட்ட செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான அக்ரி.கிருஷ்ணமூர்த்தி கலந்துகொண்டு தி.மு.க. அரசை கண்டித்தும். பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்தும் பேசினார்.

இதில் மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் நாராயணன், ஒன்றிய செயலாளர் தொப்பளான், அமுதா அருணாச்சலம், நகர இளைஞரணி தலைவர் ரஜினி, பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் மூர்த்தி, பாஞ்சாலி, ஜான் விக்டர், நகர நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com