வேளாண் மண்டலம் : சட்டப்பேரவையில் முதல்வர் பழனிசாமி, துரைமுருகன் இடையே காரசார விவாதம்

வேளாண் மண்டலம் தொடர்பாக சட்டப்பேரவையில் முதல்வர் பழனிசாமி, துரைமுருகன் இடையே காரசார விவாதம் நடைபெற்றது
வேளாண் மண்டலம் : சட்டப்பேரவையில் முதல்வர் பழனிசாமி, துரைமுருகன் இடையே காரசார விவாதம்
Published on

சென்னை

கடந்த வெள்ளிக்கிழமை கூடிய தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடரில், துணை முதல்வரும், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட் தாக்கல் செய்தார். இரண்டு நாள் விடுமுறைக்குப் பின்பு இன்று மீண்டும் சட்டசபை கூடியது. முதலில் முன்னாள் உறுப்பினர்களின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கபட்டது.

முதலமைச்சராக 3 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழக முதல்வர் பழனிசாமியை அமைச்சர் தங்கமணி பேரவையில் பாராட்டி பேசினார். கடந்த 3 ஆண்டுகளில் 72,000 மின் இணைப்புகள் தரப்பட்டுள்ளன என கூறினார்.

தொடர்ந்து சட்டப்பேரவையில் முதல்வர் பழனிசாமி, துரைமுருகன் இடையே காரசார விவாதம் நடைபெற்றது.

14 ஆண்டுகள் மத்திய ஆட்சியில் இருந்தபோது தமிழகத்திற்கு என்ன செய்தீர்கள்? தமிழகத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் திட்டங்களை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்காதது ஏன்? என திமுகவினரிடம் முதலமைச்சர் பழனிசாமி கேள்வி எழுப்பினார்.

திமுக வேளாண்மண்டலத்தை பெற்று தரவேண்டியது தானே 3 வது பெரிய கட்சி என்கிறீர்களே செய்யவேண்டியது தானே என முதல் அமைச்சர் பழனிசாமி கூறினார்.

துரைமுருகன் : நாங்கள் மத்திய அரசுடன் எதிரும் புதிருமாய் உள்ளோம். நீங்கள் தான் இணக்கமாய் உள்ளீர்கள்.வேளாண் மண்டலம் பற்றி சட்டப்பேரவையில் ஏன் தீர்மானம் நிறைவேற்றவில்லை.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com