

சென்னை,
சென்னை கீழ்ப்பாக்கத்தில் அ.தி.மு.க. சார்பில் கிறிஸ்துமஸ் தின விழா இன்று கொண்டாடப்பட்டது. இதில் கலந்து கொள்வதற்காக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல் அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வந்திருந்தனர்.
அவர்களுக்கு மகளிர் அணி சார்பில் ஆரத்தி எடுத்து வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் அ.தி.மு.க. முக்கிய பெண் உறுப்பினர்களான கோகுல இந்திரா, வளர்மதி, விஜிலா சத்தியானந்த் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
இதனை தொடர்ந்து, முதல் அமைச்சர் மற்றும் துணை முதல் அமைச்சர் மேடையில் கேக் வெட்டி கெண்டாடினர். இதன் பின்பு நடந்த சமபந்தி விருந்திலும் அவர்கள் பங்கேற்றனர். பின்னர் நிகழ்ச்சிக்கு வந்திருந்த பலருக்கு பரிசு பொருட்களும் வழங்கப்பட்டன.