அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி மீது ஊழல் வழக்குப்பதிவு

அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி மீது நாமக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் ஊழல் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி மீது ஊழல் வழக்குப்பதிவு
Published on

சென்னை,

அதிமுக ஆட்சியில் மின்சாரத்துறை அமைச்சராக செயல்பட்டவர் தங்கமணி. இந்நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் இன்று அதிகாலை முதல் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

மொத்தம் 69 இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. தங்கமணி மீது வருமானத்திற்கு அதிமான சொத்து சேர்த்ததாக கிடைத்த தகவலின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு இந்த சோதனை நடைபெற்று வருவதாக லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் 14 இடங்களிலும், நாமக்கல் உள்பட 9 மாவட்டங்களிலும், கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களிலும் முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு தொடர்புடைய மொத்தம் 69 இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி, மகன் தரணிதரன், மனைவி சாந்தி மீது நாமக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் ஊழல் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பிட்காயினில் தங்கமணி, அவரது மகன் பெருமளவில் முதலீடு செய்துள்ளதாகவும், சட்டவிரோதமாக சேர்த்த பணத்தில் பெருமளவை கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்ததாகவும் எஃப்.ஐ.ஆரில் லஞ்ச ஒழிப்பு போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே 4 அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வீடுகள் மற்றும் அவர்களுக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தியுள்ள நிலையில் இந்த சோதனை பட்டியலில் தற்போது தங்கமணியும் இணைந்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com