ஓபிஎஸ், அவரது மகன் ஆகியோருடன் அதிமுகவுக்கு எந்த தொடர்பும் இல்லை - ஜெயக்குமார் பேட்டி

ஓபிஎஸ், அவரது மகன் ஆகியோருடன் அதிமுகவுக்கு எந்த தொடர்பும் இல்லை என்று ஜெயக்குமார் கூறினார்.
ஓபிஎஸ், அவரது மகன் ஆகியோருடன் அதிமுகவுக்கு எந்த தொடர்பும் இல்லை - ஜெயக்குமார் பேட்டி
Published on

சென்னை,

சென்னையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

செந்தில் பாலாஜி மீது அமலாக்கத்துறை விசாரணை நடத்துகிறது. அதனால் அவரை அமைச்சர் பதவியை விட்டு நீக்கவேண்டும் என்பதுதான் அதிமுகவின் நிலைப்பாடு. விசாரணை சிறை கைதிக்கு எப்படி அமைச்சர் பதவியை கொடுக்கலாம்?

பொது சிவில் சட்டத்தை எதிர்க்கும் நிலைப்பாட்டில் இருந்து யாருக்காகவும் அதிமுக பின்வாங்காது. பாஜகவுடனான தேர்தல் கூட்டணி தொடர்பாக நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் போது முடிவு எடுக்கப்படும். அதிமுக முன்னாள் அமைச்சர்களை கழக பணி செய்யவிடாமல் அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு அவசர கோலத்தில் அனுப்பினால் கவர்னர் கண்ணை கட்டிக்கொண்டா கையெழுத்து போடுவார்?

ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் மீதான தீர்ப்பு குறித்து கேட்க கேள்விக்கு, ஓபிஎஸ், அவரது மகன் ஆகியோருக்கும் கட்சிக்கும் எந்தவித தொடர்பும், சம்பந்தம் இல்லை. அதிகமான அளவு தேர்தல் செலவு செய்து மகன் மட்டும் ஜெயித்தால் போதும் என ஓபிஎஸ் பணத்தை வாரி இறைத்தார். பெரியகுளம், ஆண்டிப்பட்டி தொகுதிகள் தோற்க வேண்டும் என நினைத்தார்.

பாஜக தலைவர் அண்ணாமலை எங்கள் மறைந்த தலைவரை விமர்சித்தார். நாங்கள் கடுமையான கண்டனத்தை தெரிவித்தோம். அண்ணாமலை தவறை திருத்திக் கொண்டுள்ளார்; இனி அதிமுக பற்றி விமர்சனம் செய்ய மாட்டார்" என்று கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com