மத்திய மந்திரி நிர்மலா சீதாராமனுடன் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் சந்திப்பு

கோவையில் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமனை அதிமுக எம்.எல்.ஏ.க்கள் சந்தித்து பேசியுள்ளனர்.
மத்திய மந்திரி நிர்மலா சீதாராமனுடன் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் சந்திப்பு
Published on

கோவை,

தமிழ்நாட்டில் கடந்த நான்கரை ஆண்டுகளாக நீடித்துவந்த அதிமுக-பாஜக இடையேயான கூட்டணி கடந்த சில நாட்களுக்கு முன் முடிவுக்கு வந்தது. அதிமுக தலைவர்கள் - பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை இடையே இரண்டரை ஆண்டுகளாக நீடித்த கருத்து மோதல்கள் போன்றவற்றைக் காரணம் காட்டி, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து வெளியேறுவதாக அதிமுக அறிவித்தது.

இந்த நிலையில், கோவை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்த மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனை கோவை அதிமுக எம்.எல்.ஏ.க்கள் சந்தித்து பேசியுள்ளனர். அதிமுகவின் பொள்ளாச்சி ஜெயராமன், வரதராஜ் ஜெயராமன், அமுல் கந்தசாமி, ஏ.கே.செல்வராஜ் ஆகியோர் நிர்மலா சீதாராமனை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சந்திப்பின்போது பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் மற்றும் அக்கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com