ஊழல் குற்றச்சாட்டு; டெல்லி மாநகராட்சியின் 4 கவுன்சிலர்களை நீக்கியது, பா.ஜனதா

ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கியதால் டெல்லி மாநகராட்சியின் 4 கவுன்சிலர்களை பா.ஜனதா நீக்கியுள்ளது.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

புதுடெல்லி,

டெல்லி மாநகராட்சியை சேர்ந்த பா.ஜனதா கவுன்சிலர்களான அமர்லதா சங்க்வான், சரோஜ்சிங், அதுல்குமார் குப்தா, ராதாதேவி ஆகியோர் பா.ஜனதாவில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

சரோஜ்சிங்கின் கணவர் ஷெர்சிங், ராதாதேவியின் கணவர் ராஜு ராணா ஆகியோரும் பா.ஜனதாவில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை டெல்லி பா.ஜனதா தலைவர் ஆதேஷ் குப்தா பிறப்பித்துள்ளார்.

தங்கள் வார்டுகளில் நடக்கும் மாநகராட்சி பணிகளுக்காக இவர்கள் லஞ்சம் கேட்பதாக ஒரு செய்தி சேனல் நடத்திய ரகசிய படப்பிடிப்பில் தெரியவந்தது. அதையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டும், ஊழல் குற்றச்சாட்டுக்காக 3 கவுன்சிலர்களை பா.ஜனதா இடைநீக்கம் செய்தது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com