

பெரியகுளம்,
முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பெரியகுளம் தென்கரை தெற்கு அக்ரஹாரத்தில் உள்ள தனது வீட்டில் இருந்து போடி செல்வதற்காக வெளியே வந்தார்.
அப்போது அவரிடம் நிருபர்கள், கூட்டணி குறித்து முடிவு எடுத்துள்ளீர்களா? என்று கேள்வி எழுப்பினர்.
அதற்கு அவர், “நாளை (அதாவது இன்று) நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்தபிறகு, கூட்டணி குறித்த எனது முடிவை தெரிவிக்கிறேன்” என்று கூறிவிட்டு காரில் ஏறிச்சென்றார்.