52 பயனாளிகளுக்கு ரூ.4¾ கோடியில் குடியிருப்புகள் ஒதுக்கீடு

திருப்பத்தூர் மாவட்டத்தில் 52 பயனாளிகளுக்கு ரூ.4¾ கோடியில் குடியிருப்புகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
52 பயனாளிகளுக்கு ரூ.4¾ கோடியில் குடியிருப்புகள் ஒதுக்கீடு
Published on

திருப்பத்தூர்

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் ரூ.270.15 கேடி மதிப்பீட்டில் 9 திட்டப்பகுதிகளில் கட்டப்பட்டுள்ள 2,707 அடுக்குமாடி குடியிருப்புகளை காணெலிக் காட்சியின் வாயிலாக திறந்து வைத்து, 4,880 பயனாளிகளுக்கு குடியிருப்புகளுக்கான ஒதுக்கீடு ஆணைகள் மற்றும் சாவிகளை வழங்கினார். இதனையொட்டி திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ.4 கேடி மதிப்பீட்டில் 52 பயனாளிகளுக்கு குடியிருப்புகளுக்கான ஒதுக்கீடு ஆணைகளை கலெக்டர் அமர்குஷ்வாஹா வழங்கினார். எம்.எல்.ஏ.க்கள் க.தேவராஜி ஏ.நல்லதம்பி, அ.செ.வில்வநாதன் ஆகியேர் முன்னிலை வகித்தனர்,

விழாவில் கலெக்டர் பேசுகையில், ''வாணியம்பாடி அருகே வளையாம்பட்டு பகுதியில் ரூ.48.31 கேடி மதிப்பீட்டில் 528 அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் கட்டப்பட உள்ளது. மாநில அரசு ரூ.6 லட்சமும், மத்திய அரசு ரூ.1 லட்சமும், பயனாளிகள் பங்த்குதெகை ரூ.1.65 லட்சம் என மெத்தம் ஒரு வீட்டின் மதிப்பு ரூ.9.15 லட்சம் ஆகும்.

இதில் பயனாளிகளின் முழு பங்குதெகையான ரூ.1.65 லட்சம் தெகையை செலுத்திய 52 பேருக்கு வீடுகள் ஒதுக்கீடு ஆணை வழங்கப்பட்டுள்ளது. விரைவில் மற்ற பயனாளிகளுக்கு வீடுகள் ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என கூறினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் சூரியகுமார், நகரமன்ற துணைத் தலைவர் சபியுல்லா, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய வேலூர் கேட்ட உதவி செயற்பெறியாளர் வையாபுரி உள்ளிட்ட பலர் கலந்து கெண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com