கிராம முன்னேற்ற திட்டத்தை செயல்படுத்த அனுமதிக்க வேண்டும்

பிரதம மந்திரி முன்னோடி கிராம முன்னேற்ற திட்டத்தை செயல்படுத்த அனுமதிக்க வேண்டும் ஊராட்சி மன்ற தலைவர்கள் கோரிக்கை
கிராம முன்னேற்ற திட்டத்தை செயல்படுத்த அனுமதிக்க வேண்டும்
Published on

திருவெண்ணெய்நல்லூர்

திருவெண்ணெய்நல்லூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான கூட்டம் பனப்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் இளையராஜா தலைமையில் நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர்கள் சரஸ்வதி பல்லவன்(ஆனத்தூர்), புவனேஸ்வரி பாண்டுரங்கன்(சித்தானங்கூர்), சுரேஷ்(மாதம்பட்டு), சண்முகம்(பொய்கை அரசூர்), ரவிச்சந்திரன்(அரசூர்) ஆகியோர் சிறப்புரையாற்றினா.

கூட்டத்தில் திருவெண்ணெய்நல்லூர் ஊராட்சி ஒன்றியத்தில் 2021-22-ம் ஆண்டுக்கான பிரதம மந்திரி முன்னோடி கிராம முன்னேற்ற திட்டத்தின் கீழ் ரூ.3 கோடியில் பல்வேறு திட்டப்பணிகளை அந்தந்த ஊராட்சிகளில் ஊராட்சி மன்ற தலைவர்களே செய்வதற்கு தமிழக முதல்-அமைச்சர், மாவட்ட கலெக்டர் ஆகியோர் நடவடிக்கை எடுக்க வேண்டும், அரசியல்வாதிகளுக்கு இப்பணிகளை வழங்க கூடாது, அரசியல் தலையீடு இன்றி ஊராட்சிகளில் நடைபெறும் பணிகளை ஊராட்சி மன்ற தலைவர்களின் மூலமாவே சிறப்பாக பணிகள் செய்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் ஊராட்சி மன்ற தலைவர்கள் ஸ்ரீதர்(காந்தலவாடி), லதா(டி.மழவராயனூர்), நிர்மலாபாபு(இளந்துறை), வெங்கடேசன்(பாவந்தூர்), மீனாட்சிராஜாராம்(கீரிமேடு), தீபாபிரகாஷ்(மேல்தணியாலம்பட்டு) உள்பட அனைத்து ஊராட்சி மன்ற தலைவர்களும் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com