அம்பேத்கர் நினைவு தினம்: "சமத்துவ சமுதாயத்தை உருவாக்க உறுதி கொள்வோம்" - துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் டுவீட்

சட்ட மேதை அண்ணல் அம்பேத்கரின் 64வது ஆண்டு நினைவு தினம் இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது.
அம்பேத்கர் நினைவு தினம்: "சமத்துவ சமுதாயத்தை உருவாக்க உறுதி கொள்வோம்" - துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் டுவீட்
Published on

சென்னை,

சட்ட மேதை அண்ணல் அம்பேத்கரின் 64-வது ஆண்டு நினைவு தினம் இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு நாடு முழுவதும் பல்வேறு இடங்களிலும் அவரது திருவுருவ சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது. அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் அம்பேத்கருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் சட்ட மேதை அண்ணல் அம்பேத்கரின் 64-ஆவது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படும் நிலையில், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கருத்து தெரிவித்து உள்ளார்.

இது குறித்து துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் டுவிட்டர் பதிவில் கூறிப்பிட்டிருப்பதாவது:-

விடுதலைஇந்தியாவின் முதல் சட்ட அமைச்சரும், இந்திய அரசியல் சாசனத்தின் தந்தையுமான பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் அவர்களின் நினைவுநாளில் சமநீதி, சமத்துவம் தழைத்தோங்க பாடுபட்ட டாக்டர் அம்பேத்கர் அவர்களை வணங்கி, அவரது வழியில் ஏற்றத் தாழ்வுகளற்ற சமத்துவ சமுதாயத்தை உருவாக்கிட உறுதி கொள்வோம்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com