நெத்திலி மீன் விலை தொடர்ந்து வீழ்ச்சி

குளச்சலில் நெத்திலி மீன் விலை தொடர்ந்து வீழ்ச்சி அடைந்து வருவதால் மீனவர்கள் கவலை அடைந்துள்ளனர்.
நெத்திலி மீன் விலை தொடர்ந்து வீழ்ச்சி
Published on

குளச்சல், 

குளச்சலில் நெத்திலி மீன் விலை தொடர்ந்து வீழ்ச்சி அடைந்து வருவதால் மீனவர்கள் கவலை அடைந்துள்ளனர்.

மீன்பிடி துறைமுகம்

குளச்சல் மீன்பிடி துறைமுகத்தை தங்குதளமாக கொண்டு சுமார் 300 விசைப்படகுகளும், 1000-க்கும் மேற்பட்ட பைபர் வள்ளம், கட்டுமரங்கள் மீன்பிடித்தொழில் செய்து வருகின்றன. விசைப்படகுகள் ஆழ்கடல் பகுதி வரை சென்று 7 முதல் 10 நாட்கள் வரை தங்கி இருந்து மீன்பிடித்து விட்டு கரை திரும்புவது வழக்கம். கட்டுமரங்கள் அதிகாலையில் மீன் பிடிக்க சென்றுவிட்டு மதியம் கரை திரும்பும்.

விசைப்படகுகளுக்கு கடந்த 1-ந் தேதி முதல் 61 நாட்களுக்கு மீன் பிடி தடைக்காலம் அமலில் இருந்து வருகிறது. இதனால் அவை கரையோரம் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டுள்ளன.

தற்போது வள்ளம், கட்டுமரங்கள் மட்டும மீன் பிடித்து வருகின்றன. அவற்றில் போதிய மீன்கள் கிடைக்கவில்லை. ஓரளவு மீன்களே கிடைக்கிறது.

நெத்திலி மீன்

இந்தநிலையில் நற்று சில கட்டுமரங்களில் ஏராளமான நெத்திலி மீன்கள் கிடைத்தன. அவற்றை மீனவர்கள் ஏலக்கூடத்தில் குவித்து வைத்து விற்பனை செய்தனர். ஒரு குட்டை நெத்திலி மீன் முதலில் ரூ.1000 வரை ஏலம் போனது. பின்னர் ரூ.750 என சரிந்தது. கடந்த வாரமும் நெத்திலி மீன்கள் இதே விலையில் தான் ஏலம் போனது குறிப்பிடத்தக்கது. நெத்திலி மீன் விலை தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருவதால் கட்டுமர மீனவர்கள் கவலை அடைந்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com