

'ஊட்டச்சத்தை உறுதிசெய்'
திருப்பத்தூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் சார்பில் 'ஊட்டச்சத்தை உறுதிசெய்' திட்ட தெடக்க விழா நடந்தது. கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கி 70 தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து உணவு மற்றும் ஊட்டச்சத்து பெட்டகங்களை வழங்கினார்.
அப்பேது அவர் பேசியதாவது:-
மாவட்டத்தில் 975 குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர். குழந்தைகளுக்கு எந்தெந்த ஊட்டச்சத்து வழங்க வேண்டும் என்று பெற்றேர்கள் முதலில் தெரிந்து கெள்ள வேண்டும். பாரம்பரிய உணவுகளான சிறுதானிய உணவுகளை எடுத்துக்கெள்ள வேண்டும். இந்த சிறுதானிய உணவுகள் நம்மிடம் தான் இருந்தது, அதனை நாம் ஓரம் தள்ளி வைத்து விட்டேம். சிறுதானிய உணவுகளை எடுத்துக் கெண்டால் நம்மை நாகரிகம் இல்லாத மனிதராக கருதப்படுவார்கள் என்று கருதி அரிசி சாதத்தை அதிகமாக உட்கெள்ள ஆரம்பித்தேம்.
இளம்வயதில் மாரடைப்பு
உணவுகளில் எண்ணெய் என்பது மிக முக்கியம், தெருக்கடைகளில் 'பாஸ்ட்புட்' உணவுகளை வாங்கி உட்கெள்வதை அனைவரும் தவிர்க்க வேண்டும். அஜினேமேட்டே உட்கெள்வதன் மூலமாக இளைய வயதில் மாரடைப்பு ஏற்படுகிறது.
நமது முன்னேர் பின்பற்றிய உணவு வகைகளை பின்பற்றுங்கள். காய்கறி வகைகள், கீரை வகைகள், பழங்களை உணவுகளின் அதிகம் சேர்த்துக் கெள்ள வேண்டும். முதல் ஆறு மாத குழந்தைகளுக்கு தாய்ப்பால் தவிர, வேற எந்த உணவுகளையும் கெடுக்கக் கூடாது. குழந்தைகளுக்கு இளைய வயதில் கெடுக்கின்ற உணவு தான் முதிர்வு வரை ஊட்டச்சத்துக்கு காரணமாக இருக்கும்.
சரியான முறையில் உணவு பழக்கத்தை கடைபிடித்தால் ரத்த சேகை, தாய் சேய் இறப்பினை தவிர்க்க முடியும். ஊட்டச்சத்து பற்றாக்குறையாக உள்ள குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து ஊக்குவிப்பு உணவு பெட்டகங்களை இன்றைய தினம் வழங்குகின்றேம். அதனால் அனைவரும் இதன் மூலம் பயன் பெறுங்கள். இந்த உணவுகளை உட்கெள்வதன் மூலம் பயன்களை ஆய்வு செய்து அறிக்கையாக தமிழ்நாடு அரசுக்கு அனுப்ப இருக்கிறேம்.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் மாவட்ட சமூக நல அலுவலர் மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்ட அலுவலர் ஸ்டெல்லா, இணை இயக்குநர் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் மாரிமுத்து, நகரமன்ற துணை தலைவர் சபியுல்லா, குழந்தைகள் நல மருத்துவர் செந்தில்குமரன், குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர்கள் செல்வி, .கலைச்செல்வி உள்ளிட்ட பலர் கலந்து கெண்டனர்.