"அண்ணா ஸ்டாலின், தம்பி ராகுல்" - சத்யராஜ் கலகல பேச்சு

திராவிட இயக்க வழக்கப்படி ராகுலை நான் தம்பி என அழைக்கிறேன் என புத்தக வெளியிட்டு விழாவில் சத்யராஜ் பேசினார்
"அண்ணா ஸ்டாலின், தம்பி ராகுல்" - சத்யராஜ் கலகல பேச்சு
Published on

சென்னை,

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது பள்ளி-கல்லூரி படிப்பு காலம், இளமை காலம், அரசியல் ஆர்வம், முதல் அரசியல் கூட்டம், முதல் பொதுக்கூட்ட பேச்சு, திரையுலகில் கால் தடம் பதித்தது,

திருமண வாழ்க்கை, மிசா காலத்தின் தொடக்கம் என 1976-ம் ஆண்டு வரையிலான 23 ஆண்டு கால வாழ்க்கை பயண வரலாற்று சுவட்டை உங்களில் ஒருவன் என்ற தலைப்பில் சுயசரிதை புத்தகமாக எழுதி உள்ளார்.

இந்த நூல் வெளியிட்டூ விழா இன்று நந்தம்பாக்கத்தில் நடைபெற்றது. இந்த விழாவில், ராகுல் காந்தி, கேரள முதல் மந்திரி பினராயி விஜயன், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல் மந்திரி உமர் அப்துல்லா உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த விழாவில் நடிகர் சத்யராஜ் கலந்து கொண்டு பேசினார். சத்யராஜ் பேசியதாவது: நாடாளுமன்றத்தில் தமிழக மக்களுக்கான குரலாக ஒலித்ததற்கு நன்றி, நாடாளுமன்றத்தில் சிங்கம் போல ராகுல் காந்தி கர்ஜித்தார். எங்களின் திராவிட மாடலில் நாங்கள் அனைவரையும் அண்ணா, தம்பி என்றே அழைப்போம்.

எனவே, உங்களையும் நான் தம்பி என்று அழைக்கிறேன். அண்ணா ஸ்டாலின்... தம்பி ராகுல் காந்தி... இதுதான் எங்களின் திராவிட மாடல் கலாசாரம். உங்களில் ஒருவன் புத்தகம், பக்கத்திற்கு பக்கம் ஆர்வமாக இருந்தது. ரஷ்ய தலைவர் ஸ்டாலினும் இரும்பு மனிதர் என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com