4 மாவட்டங்களில் நாளை மறுநாள் ரேசன் கடைகள் இயங்கும் என அறிவிப்பு

பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் வெள்ளநீர் வெளியேற்றபட்டு இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றன.
4 மாவட்டங்களில் நாளை மறுநாள் ரேசன் கடைகள் இயங்கும் என அறிவிப்பு
Published on

சென்னை, 

மிக்ஜம் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் 3 மற்றும், 4-ந்தேதிகளில் கனமழை பெய்தது. இதனால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளான முடிச்சூர், முகலிவாக்கம், பள்ளிக்கரணை, வேளச்சேரி, மணலி, திருவொற்றியூர், அம்பத்தூர், ஆவடி, செங்குன்றம் உள்ளிட்ட பல இடங்கள் மிகவும் பாதிக்கப்பட்டன. தற்போது பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் வெள்ளநீர் வெளியேற்றபட்டு இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றன.

இந்த நிலையில் மிக்ஜம் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.6,000 நிவாரணம் வழங்கும் பணியை நாளை மறுநாள் சென்னை வேளச்சேரியில் உள்ள அஷ்டலட்சுமி நகரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான டோக்கன் வழங்கும் பணிகள் ரேசன் கடைகள் மூலம் நடைபெற்று வருகின்றன. எனவே இந்த பணிகளை மேற்கொள்ளவதற்காக வரும் 17-ம் தேதி ஞாயிற்றுக் கிழமை அன்று சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுர், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள ரேசன் கடைகள் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com