கபீர் புரஸ்கார் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு - கலெக்டர் தகவல்

கபீர் புரஸ்கார் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பகப்படுகிறது என்று கலெக்டர் டாக்டர் ஆர்த்தி தெரிவித்துள்ளார். காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கபீர் புரஸ்கார் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு - கலெக்டர் தகவல்
Published on

ஒவ்வொரு ஆண்டும் கபீர் புரஸ்கார் விருது முதல்-அமைச்சரால் குடியரசு தின விழாவின்போது வழங்கப்பட்டு வருகிறது. 2022-ம் ஆண்டுக்கான விருது குறித்து காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

இந்த விருதானது தலா ரூ.20 ஆயிரம், ரூ.10 ஆயிரம் மற்றும் ரூ.5 ஆயிரம் தகுதி உள்ளவர்களுக்கு வழங்கப்படுகிறது.

சென்னை மாவட்டத்தை சேர்ந்த விண்ணப்பதாரர்கள் ஆயுதபடை வீரர்கள், காவல் தீயணைப்பு துறை மற்றும் அரசு பணியாளர்கள் ஆகியோர் நீங்கலாக சமுதாய நல்லிணக்க செயலாற்றும் அரசு பணியாளர்கள் செயலாற்றும் அரசு பணியின் ஒரு பகுதியாக திகழும் பட்சத்தில் இந்த பதக்கத்தை பெற தகுதி உடையவர் ஆவார்கள்.

மேலும் இந்த விருதானது ஒரு ஜாதி, இனம், பிறப்பு சார்ந்தவர்கள் பிற ஜாதி இன வகுப்பை சார்ந்தவர்களையோ அல்லது அவர்களது உடமைகளையோ வகுப்பு கலவரத்தின்போது அல்லது தொடரும் வன்முறையிலோ காப்பாற்றியது வெளிப்படையாக தெரிவிக்கையில் அவரது உடல் மற்றும் மன வலிமையை பாராட்டும் வகையில் வழங்கப்படுகிறது.

இதற்கான விண்ணப்பம் மற்றும் முக்கிய விவரங்களை தமிழ்நாடு விளையாட்டு ஆணைய இணையதள முகவரியான htpp:awards.tn.gov.in மற்றும் www.sdat.tn.gov.in பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மாவட்ட கலெக்டரிடம் பரிந்துரை பெற்று தலைமையகம் அனுப்பிட வேண்டியுள்ளதால் விண்ணப்பங்களை வருகிற 12-ந்தேதிக்குள் காஞ்சீபுரம் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலகத்தில் மாலை 5.30 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com