தற்காலிக பட்டாசு கடை அமைக்க உரிமம் பெற விண்ணப்பிக்கலாம் கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தகவல்

தற்காலிக பட்டாசு கடை அமைக்க உரிமம் பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் ராஜகோபால் சுன்கரா கூறினா.
தற்காலிக பட்டாசு கடை அமைக்க உரிமம் பெற விண்ணப்பிக்கலாம் கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தகவல்
Published on

ஈரோடு மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கரா வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு விற்பனை செய்ய தற்காலிக பட்டாசு கடை அமைக்க உரிமம் பெற விண்ணப்பிக்கலாம். சிறு வணிகர்களின் நலன் கருதி தீபாவளி பண்டிகைக்கு முன்னதாகவே அவர்களது வியாபாரத்தை தொடங்குவதற்கு ஏதுவாக இணையதளம் மூலமாக விண்ணப்பம் செய்யவும், உரிமங்களை பெற்றுக்கொள்ளவும் வழிவகை செய்யப்பட்டு உள்ளன.

அதன்படி மனுதாரர்கள் தங்களது விண்ணப்பங்களை பொது இ-சேவை மையங்களில் பட்டாசு உரிமம் கோரும் இடத்தின் புல வரைபடம், கிரையப்பத்திரம், முகவரிக்கான ஆதாரம் (ஆதார் கார்டு, ரேஷன் கார்டு), சொத்துவரி செலுத்தியதற்கான ரசீது, கடவுச் சீட்டு அளவு புகைப்படம் மற்றும் சேவை கட்டணம் ரூ.600 செலுத்தியதற்கான ரசீது ஆகிய ஆவணங்களுடன் அடுத்த மாதம் (அக்டோபர்) 19-ந்தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். அதன் பின்னர் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. விண்ணப்பம் ஏற்கப்பட்டதெனில் தற்காலிக உரிமத்தையும், நிராகரிக்கப்பட்டதெனில் அதற்கான ஆணையையும் மனுதாரர்கள் இணையதளம் மூலமாகவே பெற்றுக்கொள்ளலாம்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com