

ஹலோ எப்.எம்.மில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு ஒலிபரப்பாகும் ஸ்பாட் லைட் நிகழ்ச்சியில், சமூக வலைதளங்கள் அரசியல் ஆதாயத்திற்காக பயன்படுத்தப்பட்டு மக்கள் மூளைச்சலவை செய்யப்படுகிறார்கள் என்ற குற்றச்சாட்டு குறித்து, காங்கிரஸ் கட்சியின் முன்னணிகளின் ஒருங்கிணைப்பாளர் ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சசிகாந்த் செந்தில், பா.ஜ.க. மாநில தகவல் தொழில்நுட்ப அணி தலைவர் சி.டி.ஆர்.நிர்மல்குமார், தி.மு.க. செய்தி தொடர்பு இணை செயலாளர் இரா.ராஜீவ்காந்தி, அ.தி.மு.க. செய்தி தொடர்பாளர் கோவை சத்யன், நாம் தமிழர் கட்சியின் தகவல் தொழில்நுட்ப பிரிவு பாசறை தலைவர் சுனந்தா தாமரைசெல்வன் ஆகியோருடன் நிகழ்ச்சி தொகுப்பாளர் கலந்துரையாடுகிறார்.