சிங்கப்பூர் பூங்காக்களைப் போல் தரம் உயரும் சென்னை பூங்காக்கள்? - வெளியான தகவல்

சென்னையில் உள்ள முக்கிய பூங்காக்களை சிங்கப்பூர் பூங்காக்களைப் போல் மாற்ற ஆலோசனை நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
சிங்கப்பூர் பூங்காக்களைப் போல் தரம் உயரும் சென்னை பூங்காக்கள்? - வெளியான தகவல்
Published on

சென்னை,

சென்னையில் உள்ள முக்கிய பூங்காக்களை சிங்கப்பூர் பூங்காக்களைப் போல் மாற்ற ஆலோசனை நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

அண்மையில் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், சிங்கப்பூர் பயணம் மேற்கொண்டு அங்கு அதிகாரிகளை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார். அதற்கு அடுத்தபடியாக சிங்கப்பூர் அதிகாரிகள் தமிழ்நாட்டிற்கு வருகை தந்து முதல்-அமைச்சரை சந்திப்பது குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் உத்தரவிற்கு இணங்க சென்னையில் இருக்கக்கூடிய முக்கிய பூங்காக்களை தரம் உயர்த்தவும், மேலை நாடுகளுக்கு இணையாக சென்னை பூங்காக்களை மாற்றவும் தமிழ்நாடு அரசு ஆலோசனை நடத்தியது.

செம்மொழிப் பூங்கா மற்றும் அதற்கு அருகில் தோட்டக்கலைக்குத் துறைக்கு சொந்தமான ஆயிரம் ஏக்கர் நிலத்தில் பல்வேறு பூங்காக்கள் வடிவமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. செம்மொழிப் பூங்காவில் இருந்து நேரடியாக பாதை மூலம் எதிரில் அமைய உள்ள பூங்கா செல்லும் வகையில் வடிவமைப்புகள் மேற்கொள்ளப்படும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com