அரியலூர் பட்டாசு விபத்து - உயிரிழப்பு எண்ணிக்கை 10-ஆக உயர்வு

அரியலூர் நாட்டு பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10-ஆக உயர்ந்துள்ளது.
அரியலூர் பட்டாசு விபத்து - உயிரிழப்பு எண்ணிக்கை 10-ஆக உயர்வு
Published on

அரியலூர்,

தீபாவளி பண்டிகை நெருங்கிவரும் நிலையில், பல பகுதிகளில் பட்டாசுகள் தயாரிக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. உரிய பாதுகாப்புடன் பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வந்தாலும், சில இடங்களில் எதிர்பாராதவிதமாக விபத்துகள் ஏற்படுகின்றன.

இந்த நிலையில், அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர் அருகே உள்ள வெற்றியூரில் ராஜேந்திரன் என்பவரின் நாட்டு பட்டாசுகள் தயாரிப்பு ஆலையில் திடீரென விபத்து ஏற்பட்டது. இதில் பட்டாசு ஆலையின் அறைகள் அனைத்தும் தரைமட்டமாகின. இந்த விபத்தில் படுகாயம் அடைந்தவர்கள் தஞ்சை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி 3 பெண்கள் உட்பட 10 பேர் உயிரிழந்துள்ளனர். விபத்து தொடர்பாக பட்டாசு ஆலை உரிமையாளர் மற்றும் அவரது மருமகனை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.

விபத்துக்குள்ளான பட்டாசு ஆலையில் திருச்சி சரக டிஐஜி பகலவன் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com