பள்ளி மாணவ- மாணவிகளுக்கான கலைத்திருவிழா

ஜோலார்பேட்டையில் பள்ளி மாணவ- மாணவிகளுக்கான கலைத்திருவிழா நடைபெற்றது.
பள்ளி மாணவ- மாணவிகளுக்கான கலைத்திருவிழா
Published on

ஜோலார்பேட்டை அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் கலைத்திருவிழா நடந்தது. இதில் 6 முதல் 8-ம் வகுப்பு, 9 மற்றும் 10-ம் வகுப்பு, 11 மற்றும் 12-ம் வகுப்பு என மூன்று பிரிவுகளாக ஓவியம் வரைதல், வண்ணம் தீட்டுதல், தமிழ் மற்றும் ஆங்கில அழகு கையெழுத்து, நாட்டுப்புற பாடல், வில்லுப்பாட்டு, வாத்திய கருவிகள் இசைத்தல், நடனம், நாடகம், கதை எழுதுதல், பேச்சு போட்டி, கட்டுரை போட்டி உள்ளிட்ட 186 வகையான போட்டிகள் நடைபெற்றது.

6-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகள் போட்டிகளில் கலந்து கொண்டு தங்களின் திறமைகளை வெளிப்படுத்தினர். இந்த போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள் மாநில போட்டிகளில் பங்கேற்க தகுதி உடையவர்கள் ஆவர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com