ஈரோட்டில்இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் நடைபயணம்

ஈரோட்டில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் நடைபயணம் சென்றனா.
ஈரோட்டில்இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் நடைபயணம்
Published on

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில், நாடு முழுவதும் பா.ஜ.க. ஆட்சியை அகற்றுவோம், நாட்டையும், நாட்டு மக்களையும் பாதுகாப்போம் மாற்றத்தை நோக்கி என்பதை வலியுறுத்தி நடைபயணம் மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி ஈரோட்டில் நேற்று மாணிக்கம்பாளையத்தில் நடைபயணம் தொடங்கியது. இந்த நிகழ்ச்சிக்கு வட்டார செயலாளர் கல்யாணசுந்தரம் தலைமை தாங்கினார்.

நடைபயணத்தில் கலந்து கொண்டவர்கள் 'பா.ஜ.க. மதவெறி பாசிசத்திலிருந்தும், ஊழல் அடிமைத்தளத்திலிருந்தும் நாட்டினை மீட்போம், மக்கள் நல்லிணக்கமும், சமூக நீதியும் நிலைபெற குரல் கொடுப்போம்,' என கோஷங்கள் எழுப்பியபடி சென்றனர். நடைபயணம் முக்கிய வீதிகள் வழியாக கனிராவுத்தர் குளம் பஸ் நிறுத்தம் அருகே சென்று நிறைவடைந்தது.

இதில் ஈரோடு தெற்கு மாவட்ட செயலாளர் பிரபாகரன், மாவட்ட குழு உறுப்பினர்கள் ராணி, பிரபு, வட்டார துணை செயலாளர்கள் எம்.கல்யாணசுந்தரம், கபில்தேவ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com