திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில்தபால்தலை, நாணய கண்காட்சி

திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் தபால்தலை, நாணய கண்காட்சி நடந்தது.
திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில்தபால்தலை, நாணய கண்காட்சி
Published on

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தபால்தலை மற்றும் நாணயக் கண்காட்சி நடைபெற்றது. இக்கண்காட்சியில் உள்நாட்டு, வெளிநாட்டு நாணயங்கள், தபால் தலைகள் மற்றும் காகிதப்பணம் ஆகியவை இடம் பெற்றிருந்தன. கல்லூரி மாணவர்கள் பல்வேறு நாடுகளின் பழைய நாணயங்களையும், தபால் தலைகளையும் பார்வைக்கு வைத்திருந்தனர்.

இக்கண்காட்சியை கல்லூரி முதல்வர் து.சி.மகேந்திரன், கல்லூரி செயலர் ச.ஜெயக்குமார் ஆகியோர் தொடங்கி வைத்தனர். கண்காட்சியில் அமெரிக்கா, ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா, நியூசிலாந்து, ருமேனியா, கென்யா, நெதர்லாந்து, சிங்கப்பூர், மலேசியா, சவுதிஅரேபியா, துருக்கி, ஹாங்காங் உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சார்ந்த பழங்கால நாணயங்கள், கிழக்கிந்திய நாட்டு நாணயங்கள், ஆங்கிலேயர் காலத்து நாணயங்கள் மற்றும் இலங்கை, பாகிஸ்தான், இந்தோனேஷியா, ஆஸ்திரேலியா, பங்களாதேஷ், குவைத், மங்கோலியா, மலேசியா, நேபாளம், ஓமன், தைவான் ஆகிய நாடுகளின் தபால் தலைகள் காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்தன. பொருளியல்துறை இளங்கலை 3-ம் ஆண்டு மாணவர் எஸ்.முகுந்தன், முதுகலை 2-ம் ஆண்டு மாணவர் கு.ஆகாஷ் ஆகியோர் வெளிநாட்டு, உள்நாட்டு தபால் தலைகளை படைப்பாற்றல் முறையில் காட்சிப்படுத்தி இருந்தனர். மன்றங்களின் ஒருங்கிணைப்பாளர் சி.வேலாயுதம், நாணய சேகரிப்பு மன்ற இயக்குனர் சி.முருகேஸ்வரி மற்றும் மன்ற உறுப்பினர்கள், பேராசிரியர்கள் ஏற்பாடு செய்திருந்தனர். இக்கண்காட்சியை மாணவ, மாணவிகள், பேராசிரியர்கள், அலுலர்கள் ஆர்வத்துடன் கண்டுகளித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com