

திருவண்ணாமலையில் பள்ளி மாணவிகளுக்கு மாவட்டஅளவிலான தடகள போட்டி நடந்தது. இதில் ஏராளமான மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
திருவண்ணாமலையில் உள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் பாரதியார் மற்றும் குடியரசு தின விழாவை முன்னிட்டு மாவட்ட அளவிலான தடகள போட்டி நடைபெற்றது. இதில் 100 மீட்டர், 200 மீட்டர், 400 மீட்டர், 600 மீட்டர், 800 மீட்டர், 1500 மீட்டர், 3000 மீட்டர் ஓட்ட பந்தயங்கள், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், மும்முறை தாண்டுதல், குண்டு எறிதல், வட்டி எறிதல் என்பன உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டிகளில் 11 வட்டங்களில் இருந்து 575 -க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
போட்டியை மாவட்ட கைப்பந்து சங்கத் துணைத் தலைவர் டாக்டர் எஸ்.பிரவீன் தொடங்கி வைத்தார். இதில் 14 வயது, 17 வயது, 19 வயதிற்கு உட்பட்ட பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. வெற்றி பெற்ற மாணவிகளுக்கு உடனுக்குடன் சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டன. முதல் 2 இடங்களை பெற்ற மாணவிகள் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றனர்.\