லாரி மீது ஆட்டோ மோதல்

கூடலூரில் நின்றிருந்த லாரி மீது ஆட்டோ மோதி விபத்துக்குள்ளானது.
லாரி மீது ஆட்டோ மோதல்
Published on

கூடலூர்

கர்நாடகாவில் இருந்து கூடலூர் வழியாக கேரளாவுக்கு சரக்கு லாரிகள் உள்பட பல்வேறு வாகனங்களும் இயக்கப்படுகிறது. இந்தநிலையில் கூடலூரில் இருந்து மைசூரு செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் மாக்கமூலா பகுதியில் சாலையோரம் லாரி நின்று கொண்டிருந்தது. அப்போது கூடலூர் பஸ் நிலையம் பகுதியில் இருந்து தொரப்பள்ளிக்கு பயணிகளுடன் ஒரு ஆட்டோ வந்து கொண்டிருந்தது. இடைப்பட்ட இடங்களில் பயணிகள் சிலர் இறங்கினர். ஆட்டோவில் டிரைவர் மட்டும் இருந்தார். இந்த சமயத்தில் திடீரென ஆட்டோ கட்டுப்பாட்டை இழந்தது. தொடர்ந்து வேகமாக சென்ற ஆட்டோ சாலையோரம் நின்றிருந்த லாரியின் பின்பக்கம் மோதி விபத்துக்குள்ளானது. முன்னதாக ஆட்டோ டிரைவரும் உஷார் அடைந்து வெளியே குதித்து உயிர் தப்பினார். இதனால் அதிர்ஷ்டவசமாக அனைவரும் உயிர் தப்பினர். ஆனால் ஆட்டோ பலத்தை சேதம் அடைந்தது. இதுகுறித்து கூடலூர் போலீசார் விசாரணை நடத்தினர். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com