பள்ளி விளையாட்டு போட்டிகள் பரிசளிப்பு விழா

காரைக்குடி அருகே புதுவயல் ஸ்ரீகலைமகள் வித்யாலயா பள்ளியில் குடியரசு தினத்தையொட்டி நடைபெற்ற விளையாட்டு போட்டிகளளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
பள்ளி விளையாட்டு போட்டிகள் பரிசளிப்பு விழா
Published on

காரைக்குடி, 

காரைக்குடி அருகே புதுவயல் ஸ்ரீகலைமகள் வித்யாலயா பள்ளியில் குடியரசு தினத்தையொட்டி விளையாட்டு போட்டிகள் நடைபெற்றதுகாரைக்குடி அருகே புதுவயல் ஸ்ரீகலைமகள் வித்யாலயா பள்ளியில் குடியரசு தினத்தையொட்டி விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. இதில் ஓட்ட பந்தயம், தடை தாண்டும் ஓட்டம், கோகோ, கபடி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றது. அதன் பின்னர் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு பள்ளி முதல்வர் பரமேஸ்வரன் தலைமை தாங்கினார். சாக்கவயல் ஊராட்சி மன்ற தமிழ்மணி வரவேற்றார். சாக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துப்பாண்டி வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.

போட்டிக்கான ஏற்பாடுகளை பள்ளி துணை முதல்வர் பூபதிராஜா தலைமையில் ஆசிரியர்கள் செய்திருந்தனர். தொடர்ந்து மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. முடிவில் உடற்கல்வி ஆசிரியர் தருமர் நன்றி கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com