

சென்னை,
ஜார்ஜியா நாட்டில் கடந்த 2009-ம் ஆண்டு முதல் அந்நாட்டு அதிபரால் செயின்ட் நிக்கோலாஸ் விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருது பொதுமக்களுக்கு பயன் அளிக்கும் மற்றும் அற உணர்வுகளுடன் சமுதாயத்துக்கு பெருமை சேர்க்கும் நிறுவனங்களை நடத்தும் இளைஞர்களுக்கு வழங்கப்படுகிறது.
இந்த ஆண்டு செயின்ட் நிக்கோலாஸ் விருது, முன்னாள் மத்திய மந்திரியும், நாடாளுமன்ற உறுப்பினருமான எஸ்.ஜெகத்ரட்சகனின் மகனான சந்தீப் ஆனந்துக்கு வழங்கப்பட உள்ளது. இந்தியாவில் இந்த விருது யாருக்கும் இதுவரை வழங்கப்படவில்லை. சந்தீப் ஆனந்த் பல கல்வி நிறுவனங்களையும், பன்னாட்டு அளவில் தொழில் நிறுவனங்களையும் நடத்தி வருகிறார்.
இந்த விருதை சந்தீப் ஆனந்துக்கு ஜார்ஜியாவில் நடைபெறும் நிகழ்ச்சியில் அந்த நாட்டு அதிபர் வழங்குகிறார்.