காஞ்சீபுரத்தில் ருத்திரேஸ்வரர் கோவிலில் பரதநாட்டிய நிகழ்ச்சி

மகாசிவராத்திரியையொட்டி காஞ்சீபுரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ மகாஆனந்த ருத்திரேஸ்வரர் திருக்கோவிலில் சிவபெருமானுக்கு பல்வேறு வாசனை திரவியங்கள் கொண்டு அபிஷேகம் நடைபெற்று சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றது.
காஞ்சீபுரத்தில் ருத்திரேஸ்வரர் கோவிலில் பரதநாட்டிய நிகழ்ச்சி
Published on

பிறகு சாமி மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். மகாசிவராத்திரியன்று ஆண்டுதோறும் காஞ்சீபுரம் பெரியார் நகரை தலைமை இடமாக கொண்டு இயங்கி வரும் ஆனந்த பரதநாட்டியாலயா சார்பில் காஞ்சீபுரத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் மாணவிகளின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடத்தி வருகின்றனர்.

அந்த வகையில் இந்த ஆண்டும் பிரசித்தி பெற்ற ஸ்ரீ மகாஆனந்த ருத்திரேஸ்வரர் திருக்கோவிலில், மகாசிவராத்திரியையொட்டி

ஆனந்த பரதநாட்டியாலயா ஆசிரியை ஆனந்தி குபேரன் தலைமையில் மாணவிகள் ஒவ்வொருவரும், தனித்தனியாகவும், குழுவாகவும் சிறப்பாக நடனமாடினார்கள். கோவிலுக்கு வருகை தந்த பக்தர்கள் மாணவிகளின் நடன நிகழ்ச்சியினை மகிழ்ச்சியுடன் கண்டுகளித்தனர். பின்னர், மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ்களை ஆசிரியை ஆனந்தி குபேரன் வழங்கினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com