சிட்டுக்குருவிகளை அழியாமல் பாதுகாப்போம்

உலக சிட்டுக்குருவி தினத்தை முன்னிட்டு சிட்டுக்குருவி இனங்களை அழியாமல் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
சிட்டுக்குருவிகளை அழியாமல் பாதுகாப்போம்
Published on

உலக சிட்டுக்குருவி தினத்தை முன்னிட்டு சிட்டுக்குருவி இனங்களை அழியாமல் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

கூடுகட்டும் சிட்டுக்குருவி

உலகம் முழுவதும் நேற்று (மார்ச்20) சிட்டுக்குருவி தினமாக கொண்டாடப்பட்டது. சிட்டுக்குருவி பொதுவாக அனைத்து வீடுகளிலும் கூடு கட்டுவதால் அதனை மக்கள் கூட்டுக்குடும்பத்திற்கு எடுத்துக்காட்டாக புனிதமாக கருதி பாதுகாத்து அதற்கு இரை மற்றும் தண்ணீர் வைத்து பராமரித்து வருகின்றனர்.

சிட்டுக்குருவி ஒரு சிறிய பறவை பொதுவாக இதன் நீளம் 16 செ.மீ. எடை 24-39.5 கிராமும் இருக்கும். பெண் சிட்டுக்குருவிகள் மற்றும் குஞ்சுகள் வெளிர் பழுப்பு மற்றும் சாம்பல் நிறத்திலும், ஆண் சிட்டுக்குருவிகள் பிரகாசமான கருப்பு, வெள்ளை மற்றும் பழுப்பு அடையாளங்களுடனும் காணப்படும்.

இதன் பூர்வீகம் பெரும் பகுதி ஐரோப்பா, மத்தியதரைக்கடல் பகுதிகள் மற்றும் ஆசியா ஆகும்.

காட்டுப்பறவை

சிட்டுக்குருவிகள் மனிதனால் ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா மற்றும் அமெரிக்கக் கண்டங்களின் பெரும்பகுதிகளுக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக சிட்டுக்குருவி உலகிலேயே அதிகபட்சமாகப் பரவிய காட்டுப்பறவையாக உள்ளது. சிட்டுக்குருவி மனித குடியிருப்புடன் வலுவாக தொடர்புடையது.

இதனால் நகர்ப்புற அல்லது கிராமப்புற அமைப்புகளில் வாழ முடியும். பரவலாக மாறுபட்ட வாழ்விடங்கள் மற்றும் கால நிலைகளில் காணப்படுகின்ற போதிலும் இது பொதுவாக மனித வளர்ச்சியிலிருந்து தொலைவில் இருக்கும் விரிவான காடுகள், புல்வெளிகள் மற்றும் பாலைவனங்கள் ஆகியவற்றைத் தவிர்க்கிறது. சிட்டுக்குருவி தானியங்கள் மற்றும் களைகளின் விதைகளைப் பெரும்பாலும் உண்கிறது.

போற்றி பாதுகாப்போம்

இதன் எண்ணிக்கை, எங்கும் காணப்படும் தன்மை, மனித குடியேற்றங்களுடன் இருக்கும் இணைப்பு ஆகியவை காரணமாக சிட்டுக்குருவி கலாசார ரீதியில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இது பரவலாக, பொதுவாக தோல்வியுற்ற முயற்சியாக விவசாயத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தியதன் காரணமாக கொல்லப்படுகிறது.

சிட்டுக்குருவி பெரும்பாலும் ஒரு செல்லப்பிராணியாகவும் வளர்க்கப்படுகிறது. பரவலாகவும், ஏராளமாகவும் இருந்தாலும், இதன் எண்ணிக்கை உலகின் சில பகுதிகளில் குறைந்து விட்டது. எனவே சிட்டுக்குருவியை போற்றி பாதுகாக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com