ராகுல்காந்தியை கண்டு பா.ஜ.க. பயப்படுவது ஏன்? காங்கிரஸ் செயல் தலைவர் மோகன் குமாரமங்கலம் கேள்வி

ஹலோ எப்.எம்.மில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு ஒலிபரப்பாகும் ‘ஸ்பாட்லைட்’ நிகழ்ச்சியில், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர் மோகன் குமாரமங்கலம் கலந்து கொண்டு பேசுகிறார்.
ராகுல்காந்தியை கண்டு பா.ஜ.க. பயப்படுவது ஏன்? காங்கிரஸ் செயல் தலைவர் மோகன் குமாரமங்கலம் கேள்வி
Published on

அவர் தனது பேட்டியில், காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி நடத்தி வரும் ஒற்றுமை யாத்திரைக்கு பெரும் வரவேற்பு கிடைத்து வருவதாகவும், பல இடங்களில் மக்களோடு மக்களாக கலந்துரையாடி வருகிறார். அவருக்கு கிடைத்து இருக்கும் இந்த வரவேற்பை கண்டு பா.ஜ.க.வும், ஆர்.எஸ்.எஸ்.சும் பயப்பட தொடங்கியுள்ளதாகவும் கூறியுள்ளார்.

மேலும், பொறுப்பற்ற தலைவர் என்று தொடர்ந்து விமர்சித்து வந்த பா.ஜ.க., இப்போது ராகுல்காந்தியை பார்த்து பயப்படுவதாகவும், அதனால்தான் ராகுல்காந்தியின் ஒற்றுமை யாத்திரையை அதன் தலைவர்கள் விமர்சித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

நடைபெற இருக்கும் காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டி இருப்பது வரவேற்கத்தக்கது என்றும், மல்லிகார்ஜுன கார்கேவை காந்தி குடும்பத்தின் கைப்பாவை என்று சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், யார் வெற்றி பெற்றாலும் அவர்கள் தங்கள் சுயவிருப்பத்தின் அடிப்படையில் செயல்படுவார்கள் என்றும் கூறியுள்ளார்.

வரும் தேர்தலில் காங்கிரஸ் தயவு இல்லாமல் தி.மு.க. வெற்றி பெறும் என்று வெளியான கருத்துக்கணிப்பு பற்றி பேசுகையில், காங்கிரஸ் இல்லாமல் தி.மு.க. போட்டியிட தயாரா? என்பதை அவர்களிடம்தான் கேட்க வேண்டும் என்று பதில் தெரிவித்துள்ளார்.

மேலும், சமகால அரசியல் நிகழ்வுகள் குறித்து நிகழ்ச்சி தொகுப்பாளர் ராஜசேகரின் பல்வேறு அரசியல் கேள்விகளுக்கு சிறப்பாக பதில் அளித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com