கடல் நீர்மட்டம் தாழ்வால் கன்னியாகுமரியில் படகு போக்குவரத்து 5 மணி நேரம் தாமதம் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

கடல் நீர்மட்டம் தாழ்வால் கன்னியாகுமரியில் படகு போக்குவரத்து 5 மணி நேரம் தாமதமாக இயக்கப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
கடல் நீர்மட்டம் தாழ்வால் கன்னியாகுமரியில் படகு போக்குவரத்து 5 மணி நேரம் தாமதம் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
Published on

கன்னியாகுமரி:

கடல் நீர்மட்டம் தாழ்வால் கன்னியாகுமரியில் படகு போக்குவரத்து 5 மணி நேரம் தாமதமாக இயக்கப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

கடல் நீர்மட்டம் தாழ்வு

சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் முக்கடல் சங்கமத்தில் புனித நீராடி பகவதி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்வார்கள்.

பின்னர் கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு படகில் சென்று பார்த்து விட்டு திரும்புவது வழக்கம். இதற்காக பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம் தினமும் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை படகுகளை இயக்கி வருகிறது. நேற்று காலையில் படகுத்துறைக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்தனர்.

5 மணி நேரம் தாமதம்

ஆனால் நேற்று காலையில் கடலில் நீர்மட்டம் தாழ்வாக இருந்தது. இதனால் காலை 8 மணிக்கு படகு போக்குவரத்து தொடங்கவில்லை. மேலும் கடல் சீற்றத்துடன் காணப்பட்டதால் அலைகள் பாறைகளில் ஆக்ரோஷமாக மோதின. படகு போக்குவரத்து நடை பெறாததால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். பின்னர் பகல் 1 மணி அளவில் கடல் நீர்மட்டம் இயல்பு நிலைக்கு திரும்பியது. அதைத்தொடர்ந்து படகு போக்குவரத்து 5 மணி நேரம் தாமதமாக தொடங்கியது. அதைத்தொடர்ந்து சுற்றுலா பயணிகள் உற்சாகமாக படகில் பயணம் செய்து விவேகானந்தர் மண்டபத்தை பார்த்துவிட்டு திரும்பினர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com