‘யாருக்கும், எதற்கும் பத்தாத பட்ஜெட்’ - மு.க.ஸ்டாலின் கருத்து

தமிழக பட்ஜெட் யாருக்கும், எதற்கும் பத்தாத பட்ஜெட்டாக அமைந்திருப்பதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
‘யாருக்கும், எதற்கும் பத்தாத பட்ஜெட்’ - மு.க.ஸ்டாலின் கருத்து
Published on

சென்னை,

சென்னை தலைமை செயலகத்தில் பட்ஜெட் தாக்கலை தொடர்ந்து, எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை பொறுத்தவரையில் இது 10-வது பட்ஜெட். ஆனால் யாருக்கும், எதற்காக பத்தாத பட்ஜெட்டாக இது அமைந்திருக்கிறது. இது இந்த ஆட்சியின் கடைசி பட்ஜெட் என்பது தெளிவாக தெரிகிறது.

அரசு பணியாளர் முதல் தேர்வாணையம் வரை, தலைமை செயலகம் முதல் கிராம நிர்வாகம் வரை கடனில், மோசடியில், லஞ்சம், ஊழலில் முழுமையாக இந்த அரசு ஊறியிருக்கிறது. இதில் தொலைநோக்கு திட்டம், வளர்ச்சி திட்டங்கள் இல்லை. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணியின் துறைகளுக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது. இது மர்மமாக இருக்கிறது. இது மக்களுக்கு தெளிவாக தெரியும் என்று நினைக்கிறேன்.

பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலம் என்பதை மாநில அரசு நினைத்தவுடன் செய்திட முடியாது. காவிரி டெல்டாவை பாதுகாப்பதில் எந்த ஆட்சேபணை இல்லை. அதுதான் எங்களது இலக்கும். இதை எப்படி நிறைவேற்ற போகிறார்கள்? என்பதே பிரச்சினை. சமீபத்தில் இதுதொடர்பாக மீன்வளத்துறை அமைச்சர் மூலம் ஒரு கடிதத்தை டெல்லிக்கு அனுப்பியுள்ளார்கள். அந்த கடிதத்தில் என்ன இருக்கிறது என்பதை சொல்லவேண்டும். இல்லையென்றால் அந்த கடிதத்தை நானே வெளியிடுவேன். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com