சோழவந்தானில் புறவழிச்சாலை அமைக்க வேண்டும்

சோழவந்தானில் புறவழிச்சாலை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
சோழவந்தானில் புறவழிச்சாலை அமைக்க வேண்டும்
Published on

சோழவந்தான், 

சோழவந்தானில் அரசுஆஸ்பத்திரி, தனியார் ஆஸ்பத்திரிகள், தீயணைப்புநிலையம், போலீஸ் நிலையம், சார் பதிவாளர் அலுவலகம், தினசரி மற்றும் வாரச்சந்தை, பேரூராட்சி, துணை மின் நிலையம், தபால் நிலையம் மற்றும் அரசு அலுவலகங்கள், பள்ளிகள் என பல்வேறு முக்கிய அலுவலகங்கள் உள்ளன. தென்கரை, முள்ளிப்பள்ளம், மன்னாடிமங்கலம், குருவித்துறை, காடுபட்டி, விக்கிரமங்கலம், மேலக்கால், கொடிமங்கலம், தேனூர், திருவேடகம், நெடுங்குளம், திருவாலவாயநல்லூர், சித்தாலங்குடி, சி.புதூர், ரிஷபம், இரும்பாடி, கருப்பட்டி, நாச்சிகுளம் ஆகிய ஊராட்சிக்கு உட்பட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து சோழவந்தானுக்கு மக்கள் பஸ்கள், கார்கள், மோட்டார்சைக்கிள்கள் உள்ளிட்ட வாகனங்களில் வந்து செல்கின்றனர். இதனால் அடிக்கடி சோழவந்தான் நகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.

இது போன்ற போக்குவரத்து நெரிசலை தவிர்த்து பொதுமக்கள் போக வேண்டிய இடங்களுக்கு குறித்த நேரத்தில் செல்வதற்கு சோழவந்தானுக்கு புறவழிச்சாலை அமைக்கக்கோரி இப்பகுதி தொண்டு நிறுவனங்கள் உள்பட பல்வேறு அமைப்புகள் 40 ஆண்டுக்கு மேலாக கோரிக்கை வைத்து வருகின்றனர். தேர்தல் வரும்போதெல்லாம் வேட்பாளர்கள் புறவழிச்சாலை செய்து கொடுப்பதாக வாக்குறுதி கொடுத்து வருகின்றனர். ஆனால் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. போக்குவரத்து நெரிசல் காரணமாக சோழவந்தான் வழியாக பஸ்கள் செல்லாமல் மாற்று வழியில் இயக்கப்படுகிறது. இதனால் மக்கள் வாடிப்பட்டி, சமயநல்லூர், செக்கானூரணி ஆகிய ஊர்களுக்கு சென்று பஸ் ஏறும் நிலை உள்ளது. வெற்றிலை, நெல் மற்றும் தென்னைக்கு பெயர் போன சிறப்புமிக்க சோழவந்தானில் புறவழிச்சாலை இல்லாமல் பல்வேறு வகையில் இப்பகுதி மக்களும், விவசாயிகளும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே, சோழவந்தானில் புறவழிச்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com