

சென்னை,
தமிழக சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளநிலையில், இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் பிப்ரவரி 2 ஆம் தேதி தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையுடன், சென்னை கலைவாணர் அரங்கில் தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நாளை மாலை 4.30 மணிக்கு கூட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அமைச்சரவை கூட்டத்தில் சட்டப்பேரவை கூட்டத் தொடர் குறித்து முக்கிய ஆலோசனை நடத்தப்படலாம் என்று தெரிகிறது.