கொங்கர்பாளையம் அருகே சிறுத்தைப்புலியை பிடிக்க கூண்டு அமைப்பு

கொங்கர்பாளையம் அருகே சிறுத்தைப்புலியை பிடிக்க கூண்டு அமைப்பு
கொங்கர்பாளையம் அருகே சிறுத்தைப்புலியை பிடிக்க கூண்டு அமைப்பு
Published on

டி.என்.பாளையம்

டி.என்.பாளையம் வனச்சரகத்துக்குட்பட்டது கொங்கர்பாளையம். இ்ங்குள்ள வெள்ளக்கரடு தோட்டம் பகுதியில் நஞ்சப்பன் (வயது 51) என்பவர் ஆடுகள் மற்றும் மாடுகள் வைத்து தனக்கு சொந்தமான 4 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார். இவரது தோட்டத்துக்கு சில நாட்களுக்கு முன்பு வந்த சிறுத்தைப்புலி அங்கு கட்டப்பட்டிருந்த ஆட்டை கடித்து கொன்று வனப்பகுதிக்குள் இழுத்து சென்றது.

இதைத்தொடர்ந்து சிறுத்தைப்புலியை பிடிக்க டி.என்.பாளையம் வனத்துறை சார்பில் நஞ்சப்பன் என்பவரின் தோட்டத்தில் கூண்டு அமைத்துள்ளனர். மேலும் கண்காணிக்க அவரது தோட்டத்தில் 2 கேமராக்களும், வனப்பகுதிக்குள் ஒரு கேமராவும் வைத்துள்ளனர். இதில் வனப்பகுதியில் வைக்கப்பட்ட கேமராவில் சிறுத்தைப்புலி நடமாட்டம் இருந்ததை வனத்துறையினர் கண்டு உள்ளனர்.

மேலும் நேற்று முன்தினம் மாலை வனத்துறையினர் சம்பவ இடத்தில் ஆய்வு செய்து கொண்டிருந்த போதே நஞ்சப்பன் தோட்டத்தின் அருகே சிறுத்தைப்புலியின் உறுமல் சத்தம் கேட்டதாகவும், இதனால் தான் அச்சத்துடன் இருப்பதாகவும் நஞ்சப்பன் தெரிவித்தார். எனவே எங்களுக்கு பாதுகாப்பு அளித்து விரைவில் இந்த சிறுத்தைப்புலியை பிடிக்க டி.என்.பாளையம் வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com