லஞ்ச ஒழிப்புத்துறையில் பறக்கும்படை அமைக்கக் கோரிய வழக்கு - ஐகோர்ட்டில் தள்ளுபடி

லஞ்ச ஒழிப்புத்துறையில் பறக்கும்படை அமைக்கக் கோரிய வழக்கை வாபஸ் பெற மனுதாரர் அனுமதி கோரியதை ஏற்று, நீதிபதிகள் வழக்கை தள்ளுபடி செய்தனர்.
லஞ்ச ஒழிப்புத்துறையில் பறக்கும்படை அமைக்கக் கோரிய வழக்கு - ஐகோர்ட்டில் தள்ளுபடி
Published on

சென்னை,

லஞ்ச ஒழிப்புத்துறையில் பறக்கும்படை அமைக்கக் கோரி மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, மாநில, மாவட்ட அளவில் ஊழலை தடுக்க லஞ்ச ஒழிப்புத்துறையில் பறக்கும் படைகள் அமைக்க வேண்டும் என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. இதற்கு அரசு தரப்பில் அளிக்கப்பட்ட பதில் மனுவில், ஏற்கனவே லஞ்ச ஒழிப்புத் துறை திடீர் சோதனைகள் நடத்தி ஊழலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, லஞ்ச ஒழிப்பு துறையில் பறக்கும் படைகள் அமைப்பது குறித்து அரசு நிர்வாகம் தான் முடிவெடுக்க வேண்டும் எனத் தெரிவித்த நீதிபதிகள், அரசு ஊழியர்களுக்கு எதிராக வழக்கு தொடர முன் அனுமதி பெற வேண்டும் என சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளதையும் சுட்டிக்காட்டினர். இதனைத் தொடர்ந்து இந்த வழக்கை வாபஸ் பெற மனுதாரர் அனுமதி கோரியதை ஏற்று, வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com