முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் மீது வழக்குப்பதிவு

அடுக்குமாடி குடியிருப்பு கட்டுவதற்கு லஞ்சம் பெற்றதாக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் மீது வழக்குப்பதிவு
Published on

சென்னை,

கடந்த அதிமுக காலத்தில் அமைச்சராக இருந்தவர் வைத்திலிங்கம். இவர் சென்னை பெருங்களத்தூர் அருகே அடுக்குமாடி குடியிருப்பு கட்டுவதற்கு ரூ.27 கோடி லஞ்சம் பெற்றதாக புகார் எழுந்துள்ளது. அதாவது, கடந்த 2015-16 காலகட்டத்தில் பிரபல நிறுவனத்தின் 57.94 ஏக்கர் நிலத்தில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டுவதற்கான திட்ட அனுமதிக்கு வைத்திலிங்கம் லஞ்சம் பெற்றுள்ளதாக புகார் எழுந்துள்ளது.

அறப்போர் இயக்கத்தின் புகாரின் பேரில் வைத்திலிங்கம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. வைத்திலிங்கம், அவரது மகன்கள், மாநகராட்சி அதிகாரிகள் உட்பட 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ள தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com