மயில் சிலை மாயமானது தொடர்பான வழக்கு - அறநிலையத்துறைக்கு ஐகோர்ட் உத்தரவு

மாயமான சிலையின் அலகில் மலர் தான் இருந்தது என்பதற்கான ஆதாரங்களை சமர்ப்பிக்க அறநிலையத்துறைக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
மயில் சிலை மாயமானது தொடர்பான வழக்கு - அறநிலையத்துறைக்கு ஐகோர்ட் உத்தரவு
Published on

சென்னை,

மயிலாப்பூ கபாலீசுவரா கோயிலில் உள்ள புன்னைவனநாதா சந்நிதியில் கடந்த 2004 ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்ற பின்னா, லிங்கத்தை மலரால் அாச்சனை செய்யும் வகையில் இருந்த புராதனமிக்க மயில் சிலை மாயமாகி விட்டதாகவும், அதற்குப் பதிலாக பாம்பை அலகில் வைத்திருக்கும் மயில் சிலை வைக்கப்பட்டுள்ளதாகவும், இது ஆகம விதிகளுக்கு எதிரானது எனக்கூறி ஸ்ரீரங்கத்தைச் சேந்த ரங்கராஜன் நரசிம்மன் என்பவா சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடுத்திருந்தா. அந்த மனுவில், தற்போதுள்ள புதிய சிலையை அகற்றிவிட்டு, ஏற்கெனவே இருந்த பழைய மயில் சிலையை வைத்து கும்பாபிஷேகம் நடத்த உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தா.

இந்த வழக்கு சென்னை ஐகோர்டில் இன்று தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி, நீதிபதி பரதன் சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மாயமான மயில் சிலையின் அலகில் மலர் தான் இருந்திருக்கிறது என்பது தெரியவந்துள்ளதாக தெரிவித்தார்.

மேலும் சிலை மாயமானது தொடர்பாக விசாரிக்க உண்மை கண்டறியும் குழு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாகவும், இந்த விசாரணையை முடிக்க ஆறு வார காலம் அவகாசம் வழங்க வேண்டும் என்றும் அரசு தரப்பு வழக்கறிஞர் கோர்ட்டில் தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து ஆஜரான தமிழக அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞர், மயில் சிலை மாயமானது குறித்து காவல்துறை பதிவு செய்த வழக்கின் விசாரணை முடிவடையும் தருவாயில் உள்ளது என்றும், தொல்லியல் துறையிடம் இருந்து இந்த சிலையின் தொன்மை குறித்த சான்றிதழ் பெற வேண்டியிருப்பதாகவும் தெரிவித்தார்.

இதையடுத்து உண்மை கண்டறியும் குழுவின் விசாரணையும், காவல்துறையின் விசாரணையையும் விரைந்து முடிக்க வேண்டும் என்றும், இறுதி அறிக்கையை தாக்கல் செய்வதற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் காவல்துறைக்கு நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

மேலும் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் இருந்த மயில் சிலையின் அலகில் மலர் தான் இருந்தது என்பதற்கான ஆதாரங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று அறநிலையத்துறைக்கு உத்தரவிட்டு, இந்த வழக்கின் விசாரணையை ஜூன் முதல் வாரத்திற்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com