

சென்னை,
தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் அடுத்த 2 மணிநேரத்தில் திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக தமிழகத்தில் கடந்த 25ஆம் தேதி வடகிழக்குப் பருவமழை தொடங்கியதாக வானிலை மையம் அறிவித்திருந்தது.
மேலும் வங்ககடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக அடுத்த 2 நாட்களில் தென்தமிழகம் மற்றும் கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.