அரசு அதிகாரிகளின் மெத்தன போக்கால் தேர் விபத்துகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது - அண்ணாமலை டுவீட்

அரசு அதிகாரிகளின் மெத்தன போக்கால் தேர் விபத்துகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது என்று பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
அரசு அதிகாரிகளின் மெத்தன போக்கால் தேர் விபத்துகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது - அண்ணாமலை டுவீட்
Published on

சென்னை,

பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:-

இன்று காலை புதுக்கோட்டையில் பிரசித்தி பெற்ற அரைக்காசு அம்மன் பிரஹதாம்பாள் கோவில் தேர் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது என்ற செய்தி கவலை அளிக்கிறது. தமிழகத்தில் சமீபத்தில் தஞ்சை, தர்மபுரி, உளுந்தூர்பேட்டை எனத் தொடர்ச்சியாகத் தேர் விபத்துகள் நடைபெற்று வருகிறது.

இன்று புதுக்கோட்டையில் நடந்த தேர் விபத்தில் 8 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். தமிழக பாஜக சார்பாக மாவட்ட தலைவர் திரு செல்வன் அழகப்பன் அவர்கள் காயமடைந்த சகோதர சகோதரிகளை நேரில் சந்தித்துள்ளார்.

அரசு அதிகாரிகளின் மெத்தன போக்கும் இந்து சமய அறநிலையதுறையின் திறனற்ற செயற்பட்டாலும் இது போன்ற தேர் விபத்துகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. காயமடைந்த மக்களுக்கு நிவாரணமாக 5 லட்சம் ரூபாய் உடனடியாக திமுக அரசு வழங்க வேண்டும் என்பது தமிழக பாஜகவின் கோரிக்கை ஆகும்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com